சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த கொலை வழக்கு  தமிழகம் உள்பட மாநிலம் முழுவதும்  பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில்,  இந்த  வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில்,  அப்போதைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 9 பேர் கைதான நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்தது. வழக்கில் பெண் போலீசார், காவலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சிபிஐ முன் சாட்சியம் அளித்தனர்.  விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் சேர்ந்து அதே பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில், அரசின் வழிகாட்டுதல்கள் அமல்படுத்திதிபோது, 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  அப்போது, ஊரடங்கு கால விதிமுறைகளை மீறியதாக கூறிய  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை திறந்து வைத்திருந்ததாக காவல்துறையினர்  ஜூலை 19ஆம் தேதி இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி கொலை செய்தனர்.

விசாரணையில் முடிவில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிளை சிறையில் இருவரையும் அடைத்தனர்.  இந்த நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை- மகனுக்கு பலத்த காயங்கள் இருந்த போதும் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்காமல் சிறையிலேயே காவல்துறையினர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்து 2020 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி அன்று இருவரும் 5 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்களை ஏற்படுத்தியது.  மக்கள் கொதித்தெழுந்தனர். காவல்துறையின் விசாரணையில் தந்தை மகன் மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும், காவலர்கள் தாக்கியத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை அவரது உறவினர்கள் முன்வைத்தனர். தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இதனால் அந்தபகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து த கொடூர சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 176A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ,சாமிதுரை ,முத்துராஜ், செல்லதுரை உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் முதற்கட்டமாக சுமார் 2027 பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையும், இரண்டாவது கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட உச்ச பத்திரிகையின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த  ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வஙநத நிலையில்,  இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி முத்துக்குமரன் விசாரித்தார். அப்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீதரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார். கைது செய்த பட்ட 9 காவலர்களிடம் இறுதி விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியை தரப்பு வழக்கறிஞர் விஜயன் தன்னுடைய இறுதி கட்ட வாதத்தை முன்வைத்தார். வழக்கில் அனைத்து தரப்பிலிருந்தும் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில்,  இன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சாத்தான்குளம் கொலை வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ப்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]