சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு சென்னை காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது. இதையடுத்து வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இதுவரை தேர்தல் உடன்பாடு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும், நாம் தமிழர் கட்சி. தவெக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையில், ராமதாஸ், சசிகலா கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதனால் 5 முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட விருப்ப முள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட மத்திய காவல்முறையினர் வரும் நிலையில், மேலும் தேவைக்காக கூடுதல் பணியாளர்களைத் திரட்டும் முயற்சியில் சென்னை காவல்துறை இறங்கியுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஆர்வமுள்ள கீழ்க்கண்ட பிரிவினர் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்:முன்னாள் ராணுவ வீரர்கள்.முன்னாள் துணை ராணுவப் படை வீரர்கள். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட சென்னை காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் பிரிவு ஆய்வாளரை நேரில் அணுகி, வரும் 26-ஆம் தேதிக்குள் தங்கள் பெயர் மற்றும் முகவரியைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்குத் தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்படும் ஊதியம் வழங்கப்படும் .
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
மண்டல வாரியாகப் பெயர் பதிவு செய்யத் தொடர்பு கொள்ள வேண்டிய தேர்தல் பிரிவு ஆய்வாளர்களின் விவரம்: மண்டலம் ஆய்வாளர் பெயர் தொலைபேசி எண்.
வடக்கு மண்டலம் ஆனந்த் 94981 45519
மேற்கு மண்டலம் சாந்தினி தேவி 98401 06030
கிழக்கு மண்டலம் பத்மகுமாரி 94981 97388
தெற்கு மண்டலம் துர்கா தேவி 94980 03162
தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய முன்னாள் வீரர் களின் ஒத்துழைப்பைச் சென்னை காவல்துறை கோரியுள்ளது.
[youtube-feed feed=1]