புதுச்சேரி:  புதுச்சேரயில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்  என்றி நலையில், தவெக வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியின் பிரதேசத்தில் மார்ச் 9ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான 30 வேட்பாளர்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் நள்ளிரவில்  விஜய் அறிவித்துள்ளார். இதன் காரணமாக அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, வரும் ஏப்ரல் 9ம் தேதியே புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த மாநிலத்தில் 9.48 லட்சம் வாக்காளர்கள் அங்கு வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர. இவர்களில்  5.03 லட்சம் பெண்கள், 4.45 லட்சம் ஆண்கள்.

இந்த மாநிலத்தில்,  ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இரண்டு முனை போட்டி அங்கு நிலவி வரும் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது.

இந்த நிலையில், இங்கு அங்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைய உள்ள சூழலில், 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரங்களை விஜய் அறிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், இறுதியில் தமிழ்நாட்டை போன்று புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்தே களம் காண்கிறது.

இதுதொடர்பாக, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அந்த பட்டியலில், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனா, உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், லாஸ்பேட்டை தொகுதியில் வி. சாமிநாதன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன், முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யா, கதிர்காமம் தொகுதியில் ஆர். ஜெயந்தி ஆகிய பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

என்.ஆர். காங்கிரஸ் – பாஜக மற்றும் காங்கிரஸ் – திமுக இடையேயான கூட்டணிகள் இறுதியாகிவிட்டாலும், எந்த தொகுதிக யாருக்கு என்பதில் இதுவரை இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக திமுக – காங்கிரஸ் இடையே தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தொகுதிகளை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பல தொகுதிகளில் இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தாலும், வரும் 26ம் தேதி வரும் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் உள்ளது. அதற்குள் எந்த தொகுதி யாருக்கு என உறுதியாகிவிட்டால் மற்ற வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளனராம். ஆளுங்கட்சி கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி  2 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]