சென்னை: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக,   திமுக கூட்டணியில் தவாக வெளியேறி உள்ளது. இது திமுக கூட்டணி கட்சி தலைவர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைமையிலான  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்,  இருந்து தவகா தலைவர், வேல்முருகன்  வெளியேறி உள்ளார்.

தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும்  வேளையில், ஆளும் திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி ஒன்று விலகியுள்ளது. இது திமுகவுக்கு  ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இதுவரை தேர்தல் உடன்பாடு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும், நாம் தமிழர் கட்சி. தவெக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையில், ராமதாஸ், சசிகலா கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதனால் 5 முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேல்முருகனின்  தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக தலைமைமீது அதிருப்தி அடைந்துள்ளது. இந்த கட்சி  கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.  ஆனால், அதை ஏற்க திமுக தலைமை மறுத்து விட்டது.  இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, வேல்முருகன் தருப்பு “தங்களதுகட்சியின்  பலம் பெருகியுள்ளது, மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது” என்று கூறியும், அதை  திமுக தலைமை கண்டுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த  தேர்தலில்  கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளதால்,   கடந்த முறை ஒதுக்கப்பட்ட இடங்களைக் கூட இந்த முறை உறுதி செய்ய திமுக தயங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான அதிருப்தி  வேல்முருகன், கூட்டணி தர்மம் என்பது சமமான மரியாதையில் இருக்க வேண்டும், பிச்சை எடுப்பதில் இல்லை”  என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய கையோடு, வேல்முருகன்  அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.  “திமுகவின் வெற்றியில் எங்கள் பங்களிப்பு எவ்வளவு என்பது அவர்களுக்குத் தெரியும். இப்போது எங்களை அலட்சியப்படுத்திய திமுகவிற்கு, தனித்துப் போட்டியிட்டு எங்கள் பலத்தைக் காட்டுவோம். அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்” என்று கூறி உள்ளார்.

வட தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கியை பிரிக்க வேல்முருகனை வைத்து அரசியல் செய்து, அவரை தனிக்கட்சி தொடங்க வைத்தது, மறைந்த திமுக தவைரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி. இதையடுத்து, வன்னியர் மக்களிடையே தனது செல்வாக்கை அதிகரித்து கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கி உள்ளவர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். இவர் திமுகவில் இருந்து வெளியேறி இருப்பது,  வடமாநிலங்களில் திமுகவின் வெற்றிவாய்ப்புக்கு சறுக்கலாம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் இருந்து ஒரு முக்கியக் கட்சி வெளியேறுவது திமுகவின் பிம்பத்திற்குப் பின்னடைவைத் தந்துள்ளதாக அதிமுக மற்றும் பாமக தரப்பினர் உற்சாகமடைந்து உள்ளனர்.

[youtube-feed feed=1]