சென்னை: ரேஷன் அட்டைதாரர்களள் 3 மாதங்களுக்கான பொருட்களை ஒரே மாதத்தில் இலவசமாக பெறும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இனி ஏப்ரல் மாதத்தில், 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒரே நேரத்தில் கிடைக்குமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்முலம் நாடு முழுவதும் சுமார் 80 கோடி பயனாளிகளுக்குப் பெரும் நிவாரணம் கிடைக்கும் என்றும், புதிய அறுவடைக்கு வழிவகை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது. தற்போது, ஏப்ரல் மாதத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 3 மடங்கு உணவு பொருட்கள் வழங்கப்படுமென அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த மாதம் அவர்கள் 3 மடங்கு உணவுப் பொருட்களைப் பெறுவார்கள்.
சமீபத்திய 2026 அறிக்கைகளின் அடிப்படையில், மூன்று மாதங்களுக்கான (ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2026) ரேஷன் அரிசியை, ஏப்ரல் 2026-ல் ஒரே தவணையாக விநியோகிக்குமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வெப்பமான கோடை மாதங்களில் பயனாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் முழு காலாண்டு ஒதுக்கீட்டையும் ஒரே பயணத்தில் பெற அனுமதிக்கிறது.
பல மாநிலங்கள், குறிப்பாக தெலங்கானாவில், குடிமைப் பொருள் வழங்கல் துறை முன்கூட்டிய விநியோகத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கு ஒதுக்கீடு: பயனாளிகள் ஒரு நபருக்கு 18 கிலோ அரிசி என்ற முன்கூட்டிய ஒதுக்கீட்டை (மாதாந்திர உரிமை 6 கிலோ அடிப்படையில்) ஒரே தவணையில் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் வெப்ப அலைகளின் போது ரேஷன் கடைகளில் குடிமக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதைத் தடுப்பதற்கும், புதிய கொள்முதல் பருவத்திற்கு முன்னதாக FCI-யின் அதிகப்படியான கையிருப்பை நிர்வகிப்பதற்கும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. பலருக்குப் பயனளித்தாலும், இது அல்லது இது போன்ற முந்தைய முயற்சிகள், பயனாளிகளுக்கு அதிக அளவிலான உணவு தானியங்களைக் கொண்டு செல்வதில் உள்ள போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் உள்ளூர் ரேஷன் கடைகளில் உள்ள குறைந்த சேமிப்பு இடவசதி ஆகியவை குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் அனைத்துப் பயனாளிகளுக்கும் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒன்றாக வழங்கப்படுமென உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான உணவு தானியங்கள் ஒரே நேரத்தில் கிடைக்கும். அனைத்துப் பயனாளிகளுக்கும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் ரேஷன் கடைகளில் இருந்து உணவு தானியங்களை வாங்கிக்கொள்ளலாம். இதற்கிடையில், அரசு இந்த முடிவை மேற்கொண்டற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடந்தஆண்டு (2025) மே 21 முதல், மூன்று மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை ஒரே தவணையில் விநியோகிக்க முடிவு செய்து அறிவிப்புவெளியிட்டது. பருவமழை காரணமாக, பொதுமக்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி முதல் செப்டம்பர் வரை இருக்கும். அதுபோல, வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை தொடரும். இது இந்தியாவின் வேளாண்மை மற்றும் நீர் ஆதாரங்களுக்கு மிக முக்கியமான காலமாகும். தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பகுதிக்கு மழையைத் தருகிறது, வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அதிக மழையை அளிக்கிறது.
இதை கருத்தில்கொண்டு, பொது விநியோகத் திட்டத்தின் (PDS) பயனாளிகள், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்குரிய ரேஷன் பொருட்களை, முன்கூட்டியே ஒரே கட்டமாகப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யுமாறு, உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். பருவமழைக்காலத்தில் போக்குவரத்து சிரமமாகிவிடும் என்பதால், பருவமழை தொடங்குவதற்கு முன்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஏற்கனவேகடந்த ஆண்டு மே 21 முதல் இதுபோன்ற உத்தரவு வெளியானது.
இந்த நிலையில், மத்தியஅரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாநில அரசுகளுக்கு சுற்றறிக் கை அனுப்பி உள்ளது. ஜூன் மாதம் வரையிலான உணவு தானியங்களை மத்திய அரசிடம் இருந்து முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் அரிசியை மத்திய இருப்பிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதற்கு காரணம், அடுத்த சில வாரங்களில் மத்தி ய அரசு புதிய கோதுமையை கொள்முதல் செய்ய உள்ளது. இதன் காரணமாக மாநில அரசுகளில் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் புதிய உணவு தானியங்களை சேமித்து வைக்க கிடங்குகளில் இடம் கிடைக்கும்.
இலவச உணவுப்பொருள்
குடிமக்களுக்கு ரேஷன் அட்டைகள் மூலம் இலவச தானியங்கள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு கோதுமை ற்றும் அரிசி கிடைக்கும். இந்த தானியங்களை நீங்கள் ஒவ்வொரு மாதமும் கொண்டு செல்லலாம். இருப்பினும், இப்போது ஏப்ரல் மாதத்தில் 3 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் ஒன்றாக வழங்கப்படும். இதற்கான சரியான காரணம் முறையாக வெளியிடப்படவில்லை. ஆனால் அடுத்த ஒருசில மாதங்களுக்கு வெப்ப அலை காற்றுகள் வீசக்கூடும், வெப்ப நிலை அதிகரக்கக் கூடுமென்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
[youtube-feed feed=1]