சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஏப். 16 முதல் மே 31 வரை 45 நாட்களுக்கு கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு  முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும்  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,   1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.

அதேபோல், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.

ஏப்ரல் 16 ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைந்து 17 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். அதன்பிறகு 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

[youtube-feed feed=1]