சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார் என  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணியில் பாஜக  உள்படபல கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க பாஜக தலைவர்களான அமித்ஷா உள்பட பலரை சந்திக்க அடிக்கடி டெல்லி சென்று வருகிறார். இதை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த  அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன்  விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அபபோது,   “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் டெல்லி தலைவர்களைச் சந்திப்பதற்காக செல்லவிருக்கிறேன். முதல்வர் ஸ்டாலினைப் போல, கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கும்போது,  டெல்லிக்குச் செல்வது ஏன் எனக் கேட்கிறீர்கள். எங்கள் கூட்டணியின் தமிழ்நாடு தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக பேசுவதற்காக டெல்லி செல்கிறேன் என்றவர்,  அகில இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதன்மைத் தலைவர் அமித் ஷா.  அதனால், அவருடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணன் பழனிசாமி, அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்..எனக்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே அழைப்பு வந்துவிட்டது.  இதையடுத்து, இன்று பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க டெல்லி செல்கிறேன்.

தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெற்றுத்தருவதற்காக அவர்கள் டெல்லிக்குச் செல்லவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநிலத்துக்கான நிதியைப் பெற்றுத்தர முடியுமா?  என கேள்வி எழுப்பியவர்,  அதைவிட  டெல்லி எவ்வளவு நிதி கொடுத்தாலும், அதை கபளீகரம் செய்வதைத் தான் திமுக அரசு செய்கிறது.

முதல்வர் சும்மா சும்மா டெல்லி… டெல்லி… என்கிறார்.  டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது என்றவர்,

2004, 2024 ஆம் ஆண்டுகளில் பணம் கொழிக்கும் மத்திய அமைச்சரவையில் துறைகளை வாங்கி தமிழ்நாட்டுக்கு அவப் பெயரை உருவாக்கியது திமுக.

. காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள தொப்புள்கொடி உறவுகள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தது திமுக அரசு என்று விமர்சித்தவர்,

இப்போது நாங்கள் டெல்லிக்கு  சென்றாலே   முதல்வர் ஸ்டாலின் பயத்தில் அலறுகிறார் என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில்,  தொகுதிப்பங்கீடு முடிவுகள் இன்னும் 4 நாள்களில் சுமுகமாக எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]