சென்னை: தமிழ்நாட்டிறக்கு 5 தலைநகரங்கள், தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றம், வரி பகிர்வு மாற்றம், கல்வி கடன் ரத்து உள்பட பல்வேறு அறிவிப்புகள்  நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  மார்ச் 19ந்தேதி அன்று சென்னையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்த முறை   திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு  முனை போட்டி நிலவுகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுசிகறது.

இந்த நிலையில்,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மாநிலத்தில் பெறப்படும் வரிகளில் மாநில அரசுக்கு 75 சதவீதமும், மத்திய அரசுக்கு 25 சதவீதமும் என பிரிக்கப்படும்.

குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு, அனைவருக்கும் தூய குடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும்.

வேளாண்மை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும்.

பலகோடி பனைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

தமிழ்வழி மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.

திருநங்கை, திருநம்பிகளுக்கு தனி மருத்துவனை திருச்சியில் அமைக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, உள்ளாட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அரசு மருத்துவமனைகளில் தான் மருத்துவம் செய்யவேண்டும், அவர்களது குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்கவேண்டும் என சட்டம் இயற்றப்படும்.

விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு சமவாய்ப்பு, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலைவாய்ப்பு, தமிழ்குடிகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவு பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் அளித்திருக்கிறோம்.

நாங்கள் வெட்டி பேச்சு பேசுபவர்கள் அல்ல. நாங்கள் மெதுவாக வந்தாலும் எல்லோருக்கும் பொதுவாக வருவோம். ஆனால் பின்னோக்கி செல்ல மாட்டோம். நல்ல அரசை அமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கையின் முழு விவரம் காண  கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்.

NTK-2026-Manifesto 20-01-2026

[youtube-feed feed=1]