சென்னை: திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸடாலின் இன்று 4வது நாளாக நேர் காணல் நடத்தி வருகிறார்.
இதற்கிடையில், நாளை ரம்ஜான் பண்டிகையொட்டி, மார்ச் 21 நடைபெற இருநத திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 23ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தமுறை நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுசிகறது.
திமுக சார்பில், விருப்பமனு பெற்றவர்களிடம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாட்டில் நாளை (மார்ச் 21ஆம் தேதி ) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால், நாளை (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நேர் காணல் 23ந்திக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளத.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, 21ந்தேதி நடைபெற இருந்த நேர்காணல், ‘ வரும் 23ஆம் தேதி திங்கள்கிழமை அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு.
அதன்படிஇ வரும் 23ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, பெரம்பலூர், அரியலூர் தொகுதி மாவட்ட வேட்பாளர்களுக்கும், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்ட வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
