சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால், மாநில அரசின்  அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 15, 2026 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது., தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிய அரசாணைகளை வெளியிடுவதற்கு முன்பாக அவற்றை ஆய்வு செய்யத் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட் டுள்ள அரசாணையில்,  ஆய்வுக் குழுவின் கட்டமைப்பு அரசாணைகளை ஆய்வு செய் வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பணிக்குழுவில் பின் வரும் அதிகாரிகள் இடம்பெறுவர்:

தலைவர் – தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர். உறுப் பினர்கள் – பொது மற்றும் மறு வாழ்வுத்துறை முதன்மைச் செய லாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்.

செயல்முறை மற்றும் கட்டுப் பாடுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தக் காலகட்டத்தில், எந்தவொரு புதிய திட்டமோ அல்லது அரசா ணையோ பிறப்பிக்கப்பட வேண்டு மானால், அது கீழ்க்கண்ட நிலை களைக் கடக்க வேண்டும்.

முன்மொழிவு சமர்ப்பித்தல்

அரசுத் துறைகள் தாங்கள் பிறப்பிக்க விரும்பும் அரசாணைகள் குறித்த முன்மொழிவை முத லில் இந்த ஆய்வுக் குழுவின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும். குழுவின் ஆய்வு: தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு அந்த முன்மொழிவுகளை விரிவாக ஆய்வு செய்து அனுமதி அளிக்கும்.

தேர்தல் ஆணைய ஒப்புதல்

ஆய்வுக் குழுவின் பச்சைக் கொடி கிடைத்த பிறகு, அந்த கோப்புகள் தமிழ்நாடுத் தலைமைத் தேர்தல் அதிகாரி வாயிலாக இந் தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்.

இறுதி அனுமதி

தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த பிறகே சம்பந்தப்பட்ட அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தேவைப்படும் நேரங்களில் எல்லாம் இந்த ஆய்வுக் குழு கூடி முடிவுகளை எடுக்கும் என அந்த அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதுமின்றி அரசின் நிர்வாகப் பணிகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]