சென்னை: தவெகவின் மகளிர் அணி நிர்வாகியாக  இருந்து வந்த  நடிகை ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் திமுகவில் இணைந்தார்.

தவெக தலைவர்  விஜய் – சங்கீதா விவாகரத்து மற்றும் திரிஷா விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து வருகின்றன. பலர் விஜயின் நம்பகத்தன்மையை குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளனர். அதுபோல,  தவெகவில் மகளிர் அணி நிர்வாகியாக ரஞ்சனா நாச்சியாரும் விஜயின் நடவடிக்கையை கடுமையாக சாடியிருந்தார். இதனால், அவருக்கு அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது பல முக்கிய நிர்வாகிகள் ரஞ்சனாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஞ்சனா நாச்சியார் த மிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 திமுகவில் இணைத்துக்கொண்ட ரஞ்சனா நாச்சியார் செய்தியாளர்களிடம் பேசும்போது , ”திராவிட இயக்கத்தில் என்னை இணைத்துக்கொள்வதை பெருமையாக பார்க்கிறேன். பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது” என்று கூறினார்.

முன்னதாக ரஞ்சனா நாச்சியார்  பாஜகவில் பயணித்து வந்த நிலையில்,  பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்தார்.  பின்னர்,   அக்கட்சியின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகினார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.  அவருக்கு மகளிர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.
[youtube-feed feed=1]