சென்னை: தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத் துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு ஆய்வு செய்து பதற்றமான தொகுதிகளின் பட்டியலை கணக்கில் எடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது. அதே நேரம் ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை வாக்குப்பதிவிற்கான நாளாக குறிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்தாலும், தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடும்.
எனவே அனைவரும் வாக்களுக்கும் வகையில் ஏப்ரல் 23ஆம் தேதி சம்பளத்தோடு விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஓ நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து அதை நடைமுறைப்படுத்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
[youtube-feed feed=1]