சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய ககூட்டணியில், இதுவரை 49_கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 06ந்தேதி. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை – ஏப்ரல் 07ந்தேதியும், வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள் ஏப்ரல் 09ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி, அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,69,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சராசரியாக 700 பேருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்ட உள்ளது.. வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில், 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.. நகர்ப்புறங்களில் 30,967 ஓட்டுச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. தேர்தல் காரணமாக மாநிலம் முழுவதும், ஏப்ரல் 15ந்தேதி மாலை முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் திமுக கூட்டணி பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறது. ஆட்சியை கைப்பற்ற அதிமுக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. இதன் காரணமாக, இரு கட்சிகளும் பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சாதிய அமைப்புகள், சங்கங்களின் ஆதரவினை பெற்று வருகின்றன. அதன்படி, திமுக கூட்டணியில் 23 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 49 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம் வெளியாகி உள்ளது.
1. பாரதிய ஜனதா கட்சி
2 பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி)
3 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (டிடிவி தினகரன்)
4 தமிழ் மாநில காங்கிரஸ் (ஜிகே வாசன்)
5 தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (ஜான்பாண்டியன்)
6 இந்திய ஜனநாயக கட்சி (பாரிவேந்தர்)
7 புதிய நீதி கட்சி (ஏசி சண்முகம்)
8 புரட்சி பாரதம் (பூவை ஜெகன் மூர்த்தி)
9 தமிழ் மாநில முஸ்லிம் லீக் (சேக் தாவூத்)
10 பெருந்தலைவர் மக்கள் கட்சி (என். ஆர் தனபாலன்)
11 அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்
12 தென்னிந்திய பார்வர்டு பிளாக் (திருமாறன் ஜி)
13 பாரதிய ஃபார்வர்டு பிளாக் (முருகன் ஜி)
14 தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் (உசிலை சங்கிலி)
15 தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பு (சந்தன பிரியா பசுபதி பாண்டியன்)
16 கள்ளர் முன்னேற்ற சங்கம்
17 மருது சேனை (ஆதிநாராயணன் தேவர்)
18 புரட்சித் தமிழகம் (ஏர்போர்ட் மூர்த்தி)
19 தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்
20 தமிழக நீதி கட்சி (வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம்)
21 தமிழ்நாடு பிராமணர் சங்கம்
22 கொங்கு மக்கள் முன்னணி
23 தமிழ் தேசிய கட்சி
24 அகில இந்திய நாடார் மகாஜன சபை
25 கொங்குநாடு முன்னேற்ற கழகம் (பெஸ்ட் ராமசாமி)
26 நமது கொங்கு முன்னேற்ற கழகம்
27 கொங்கு தமிழர் எழுச்சி பேரவை
28 கொங்கு நாடு விவசாயிகள் கட்சி
29 உழவர் உழைப்பாளர் கட்சி
30 தமிழ்நாடு ஊராளி கவுண்டர் கூட்டமைப்பு
31 தமிழ்நாடு தேவர் பேரவை
32 தென்னாட்டு மக்கள் கட்சி
33 நேதாஜி சுபாஷ் சேனை
34 மருது தேசிய கழகம்
35 தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன சங்கம்
36 ஒருங்கிணைந்த இந்திய ஐக்கிய குடியரசு கட்சி
37 ஆதி தமிழர் முன்னேற்ற கழகம்
38 அகில இந்திய முக்குலத்தோர் பாசறை
39 தமிழ்நாடு நாடார் சங்கம்
40 அனைத்து மக்கள் அரசியல் கட்சி (ராஜேஸ்வரி பிரியா)
41 தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு
42 அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற சங்கம்
43 அகில இந்திய குயவர் உரிமை கட்சி
44 இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
45 தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் முன்னேற்ற சங்கம்
46 அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (டாக்டர் சேதுராமன்)
47 நாடார் பாதுகாப்பு பேரவை
48 வளரும் தமிழகம் கட்சி
49 தமிழ்நாடு முன்னேற்ற காங்கிரஸ்
[youtube-feed feed=1]