சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று 3வது நாளாக நேர்காணல் நடத்துகிறார். இன்று கருர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர் காணல் நடத்துகிறார்

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திமுக  தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த முறை திமுக தலைமை 23 கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணி அமைத்து தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது.

இதற்கிடையில்,  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்  திமுக தரப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.  தற்போது அவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மூத்த நிர்வாகிகள் குழு நேர்காணல் நடத்தி வருகிறது.  வருகிற 22-ந்தேதி வரை தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது.

இன்று 3வது நாளாக  நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது.  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நேர்காணலை நடத்தி வருகின்றனர். வ ஒவ்வொரு தொகுதி வாரியாக வேட்பாளர்களை உள்ளே அழைத்து தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டிருந்தார். அப்போது சிலர் தங்கள் கருத்துகளை கூறினார்கள். இந்த நேர்காணலின் போது கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

அதன்படி இன்று காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் (வடக்கு, மத்திய), நீலகிரி மாவட்ட தொகுதிகளுக்கும், மாலை கிருஷ்ணகிரி, திருப்பூர் (கிழக்கு, மேற்கு), திண்டுக்கல் மாவட்ட தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது. வருகிற 22-ந்தேதி வரை தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடைபெற இருக்கிறது. கோவை உள்பட கொங்கு மண்டல வேட்பாளர் தேர்வில் செந்தில் பாலாஜியின் பங்கு அதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது

[youtube-feed feed=1]