சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாரி ஊழியர்களுக்கு 6சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கு அரசு 6% ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை மற்றும் கருணைத் தொகை வழங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து ஏற்படுத்தப்பட்ட குழுவினருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இதர சங்க நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில்  இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, 01.12.2023 முதல் அமலுக்கு வரும் வகையில், ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 6உயர்வு வழங்கப்படும். அதே தேதியிலிருந்து 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு கூடுதலாக 3% சேவை பலன் வழங்கப்படும். அலுவலர்களுக்கு ₹3,000 முதல் ₹7,000 வரை சிறப்புப் பணி வழங்கப்படும்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனிடையே, அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தீர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக,  அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 01.12.2023 முதல் அமலுக்கு வரும் வகையில், ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்வு வழங்கப்படும். அதே தேதியிலிருந்து 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு கூடுதலாக 3% சேவை பலன் வழங்கப்படும். அலுவலர்களுக்கு ₹3,000 முதல் ₹7,000 வரை சிறப்புப் பணி வழங்கப்படும். இத்தகவல் 13.03.2026 அன்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இறுதி கட்ட பேச்சுவார்த்தை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு தொடர்பான நிலுவைத் தொகைகள் 01.12.2023 முதல் கணக்கிடப்பட்டு, 01.12.2025 முதல் பணமாக வழங்கப்படும். இதற்கிடையில், 2023 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரை மாதந்தோறும் ₹500 கருணைத் தொகை வழங்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2025 டிசம்பர் முதல் நிலுவைத் தொகைகள் ஒரே தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாகவே, ரேஷன் கடை பணியாளர்களின் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு, சுமார் 26,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதனால் பயனடைந்துள்ளனர். அதே நேரத்தில், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கும் விரைவில் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

[youtube-feed feed=1]