டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில்,  டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்  திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

முன்னதாக நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றவர், அங்கு காலை 11 மணிஅளவில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில், தனக்கு  எதன் அடிப்படையில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

கடந்த 2025ம் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தற்போது சிபிஐ  விசாரித்து வருகிறது,

வழக்குதொடர்பாக  தவெக தலைவர் விஜய் மற்றும் முக்கிய  நிர்வாகிகள் உட்பட பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு முறை தவெக தலைவர் விஜய்யும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் அதிகாரிகள் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததாகவும், அதற்கு விஜய் அளித்த பதில்களை எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மார்ச் 10ஆம் தேதி, அடுத்தகட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் பல்வேறு பணிகள் காரணமாக 15ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது விஜய் பல்வேறு வீடியோ ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், சிபிஐ   திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை  விசாரணை ஆஜராகும்படி அழைப்பு விடுத்து. அதன்படி,  இன்று (மார்ச் 17) அவர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராககி உள்ளார்.

அதற்காக, நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் திமுக பிரமுகர்கள்  ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

முன்னதாக, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குறித்து செந்தில் பாலாஜி கூறுகையில், “மார்ச் 17ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. நேரில் ஆஜராகி உரிய பதில்களை அளிப்பேன். எதன் அடிப்படையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அந்த கட்சி கூட்டத்திற்கு அனுமதி கோரி நிகழ்ச்சியை நடத்தியது. அதற்கு காவல்துறையும், கரூர் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியது. ஆனால் எனக்கு சம்மன் அளித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]