டெல்லி: தமிழ் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில், பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது, தமிழ் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நூலுக்கு 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயரிய இலக்கிய விருதாக சாகித்திய அகாடெமி விருது இருந்து வருகிறது. இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய படைப்பாளிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பரிசுத்தொகையாக ரூ.1 லட்சமும் , பட்டயமும் வழங்கப்படுகிறது.
இந்த விருதானது, தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கியம், விமா்சனம் போன்ற பிரிவில் எழுத்தாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமி விருது பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இதில், தமிழ் மொழியில் வெளியான ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடெமி விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் சிறுகதையின் தடங்கள் எனும் நூல் 1913 -1970 வரையிலான தமிழ் சிறுகதை உலகின் பரிமாண வளா்ச்சியை விரிவாக ஆராயும் 900 பக்கங்களுக்கு மேலான ஒரு முக்கியமான ஆவணமாகும்.
பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதைகளின் வோ்கள், போக்குகள் மற்றும் படைப்பாளிகளை பற்றி ஆராய்கிறது. தமிழ் சிறுகதைகளின் முக்கிய ஆவணமாக கருதப்படும் இந்நூலுக்கு மத்திய அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்நூலின் எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் பட்டயமும் வழங்கி கௌரவிக்கவுள்ளது.
[youtube-feed feed=1]