சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடன் பிரபல கிரிகெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சந்தித்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளதில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாட்டி, வெற்றிக்கோப்பை பெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றிருந்தனர். அவர்களின் ஆட்டமும் போற்றத்தக்காத இருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, இருவரும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரை தரிசித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று சென்னை வந்தவர்கள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்கள் சுழல் இரட்டையர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தியுடன் மறக்கமுடியாத தருணங்கள்.

விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையால் வடிவமைக்கப்பட்ட அவர்களின் பயணத்தில் அவர்களுடன் ஒரு அற்புதமான தொடர்பு இருந்தது. வாஷிடங்டன் சுந்தர் மற்றும் வருன் சக்ரவர்த்தி   இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெறும் தருணங்களையும் பெருமைமிக்க தருணங்களையும் வாழ்த்து கிறேன்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]