டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில், அம்மாநில தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் அதிரடியாக நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 15ந்தேதி அன்று மாலை வெளியிட்டது. அதன்படி, மேற்குவங்க மாநிலத்தில் இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறை செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோரை அந்த பொறுப்பில் இருந்து இந்திய தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது.
தொடர்ந்து, தேர்தல் ஆணையம், மேற்கு வங்க மாநில புதிய தலைமைச்செயலாளராக 1993-ஆம் ஆண்டு தொகுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியான துஷ்யந்த் நரியாலாவை நியமித்ததுடன், சக்ரவர்த்தி தேர்தல் தொடர்பான பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்தது. மேலும, மேற்கு வங்கத்தின் உள்துறைச் செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனாவையும் தேர்தல் ஆணையம் அப்பதவியிலிருந்து நீக்கியது.
மேலும், 1997-ஆம் ஆண்டு தொகுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியான சங்கமித்ரா கோஷை உள்துறை மற்றும் மலைப்பகுதி விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளராக நியமிக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், தேர்தல் பணிகள் முழுமையாக முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பதவியிலும் நியமிக்கப்படக் கூடாது,” என்று ஆணையத்தின் செயலாளர் சுஜீத் குமார் மிஸ்ரா கையெழுத்திட்ட அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநிலத்தின் தேர்தல் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ததைத் தொடர்ந்தே, இவ்விரு அதிகாரிகளையும் அப்பதவிகளிலிருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்ட தாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 06 ஆகும். இதையடுத்து ஏப்ரல் 7ந்தேதி வேட்பு மனுப் பரிசீலனையும், ஏப்ரல் 8ந்தேதி வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாளாகும். இதையடுத்து, ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
2வது கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 02 தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 09ந்தேதியும். தொடர்ந்து ஏப்ரல் 10ந்தேதி வேட்பு மனுப் பரிசீலனை செய்யப்படுகிறது.வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள் ஏப்ரல் 13 இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் இந்த தொகுதிகளில் ஏப்ரல் 29ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவுகள் மே 4ந்தேதி எண்ணப்படுகிறது.
இதற்கிடையில், ஏப்ரல் 15ந்தேதி தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்குவங்க மாநிலத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வருக்கு கைத்தடியாக செயல்பட்டு வந்த மாநில தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை அதிரடியாக நீக்கி நடவடிககை எடுத்துள்ளது.
மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சிறிது நேரத்திலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறை செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோரை அந்த பொறுப்பில் இருந்து இந்திய தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது
[youtube-feed feed=1]