சென்னை: மார்ச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தேர்தல் வெற்றி குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே நான்காம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். இதனால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக திமுக கூட்டணியும், இழந்த ஆட்சியை மீண்டும் அமைக்க அதிமுக – பாஜக கூட்டணியும் அரசியல் பணிகளில் மும்முரம் வருகின்றனர்.
இதில், விஜயின் தவெகவும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் அரசியல் பணிகளில் வேகம் எடுத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்குமுனை போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், திமுக தலைமையில் இதுவரை இல்லாத அளவிற்கு 28 கட்சிகளை மாபெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது.
நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.10 மணிக்குத் தொடங்கும் இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்திற்குத் தமிழக முழுவதிலும் உள்ள மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், களப்பணி குறித்தும், பிரச்சார வியூகங்கள், தேர்தல் நேரத்தில் எவ்வாறு எதிர்க்கட்சிகளைக் கையாள்வதும், அவர்களின் விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலடிக் கொடுக்க வேண்டுமென்று ஆலோசிக்கப்படுவ தாகக் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]