சென்னை:  சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்தார்.

சென்னையில் நாளுக்கு நாள் போதை கலாச்சாரம், கொலை, கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில், பிரபல வடசென்னை ரவுடிகளில் ஒருவரான தொப்பை கணேசனை போலீசார் என்கவுடண்டர் செய்தனர்.

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள தொப்பை கணேசன் எனப்படும் ரவுடி,  மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்ததாக கிடைத்த   தகவல்களைத் தொடர்ந்து, நேற்று இரவு அவரை பிடிக்க போலீசார் பிடிக்கச் சென்றபோது, போலீசாரை  தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது, தற்காப்புக்காக போலீசார் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில்  ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்ததாக  போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 30 – ம் தேதி சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே வீடு புகுந்து உரிமையாளர்களை கட்டிப் போட்டு ரூ.25 லட்சம் பணம் மற்றும் 15 பவுண் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தொப்பை கணேசன் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொப்பை கணேசன் தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

[youtube-feed feed=1]