சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகர் இன்று மதியம் பதவியேற்றார் . அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள ஆளுநராக உள்ள அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று தமிழகத்தில் உள்ள மக்கள் மாளிகையில் (ராஜ்பவன்) பொறுப்பேற்றார். அவருக்கு தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொறுப்பு ஆளுநருக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, , தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.
இதற்கிடையில்,மேற்கு வங்க மாநிலத்தின் 22வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
[youtube-feed feed=1]