அதுபோல, தமிழ்நாட்டில் 90 நாட்களுக்கு போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது, வதந்திகளை நம்ப வேண்டும் என -தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போரால் கச்சா எண்ணை விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உபயோகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில், சில முன்னணிஓட்டல்கள் மற்றும் கடையினர், சமையல் சரிவாயு தட்டுப்பாடு, அதனால் கடைகளை மூடுவோம்எ ன என வதந்திகளை கிளம்பி வருகின்றன.
இந்த நிலையில், வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம். நாடு முழுவதும் உள்ள அனைத்து HPCL பெட்ரோல் பங்குகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என அஞ்சி மக்கள் பங்குகளில் குவிந்துவரும் நிலையில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு – தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.முரளி தெரிவித்துள்ளார். கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம். எவ்வளவு கேட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் தருகின்றன, பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி என தெரிவித்துள்ளார். .
டீலர்களுக்கு கடனில் கொடுப்பதை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. வதந்தியால் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கினால் விரைவில் காலியாகி செயற்கை தட்டுப்பாடு ஏற்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.