சென்னை: தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று எதமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு காவல்துறை தரப்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்துக்கு குடியரசு தலைவர் மாற்றினார்.  கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் ஆளுநராக  இருந்து வந்த  ஆர்.என். ரவிக்கும்,  திமுக தலைமையிலான ஸ்டாலின்  அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.  இதையடுத்து அவர் மாற்றப்பட்டார்.  மேலும்,  தமிழ்நாட்டின் பொறுப்புஆளுநராக  கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  நியமிக்கப்பட்டு உள்ளர்.

இந்த  நிலையில்,   ஆர்.என். ரவி   இன்று (மார்ச் 11 புதன்கிழமை)  காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.  சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் ஆர்.என். ரவி, அங்கிருந்து நாளை  மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் பதவி ஏற்க உள்ளார். இதற்காக நாளை காலை கொல்கத்தாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்துக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ்நாடு காவல்துறையினர் மரியாதை அளித்தனர்.

[youtube-feed feed=1]