சென்னை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு​வின் பெயரைப் பயன்​படுத்​தி, நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்​டுமென தவறான தகவல்​கள் பல்​வேறு செல்​போன் எண்​களுக்கு தொடர்ச்​சி​யாக குறுஞ்​செய்​தி​கள் மூலம் அனுப்​பப்​பட்டு வந்​தன. இது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,  சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடேஇ சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு​வின் பெயர் மற்​றும் முகவரியை தவறாகப் பயன்​படுத்தி  சிலர் வதந்தி பரப்​பி வருகின்றனர். அவ்வாறு வதந்தி பரப்புபவர்​கள் மீது சட்​டப்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு​வின் அதி​காரப்​பூர்​வ​மான பெயரை​யும், அதன் முகவரியை​யும் பயன்​படுத்தி ஒருசில நபர்​கள் தவறான தகவல்​களை பரப்பி வரு​வது அரசின் கவனத்​துக்கு வந்​துள்​ளது. இத்​தகைய வதந்திகளைப் பரப்​புவது அரசு மற்​றும் நீதித்​துறைக்கு எதி​ரான சட்​ட​விரோதச் செய​லாகும்.

எனவே, போலித் தகவல்​கள் அல்​லது கடிதங்​களை உரு​வாக்​கு​வோர் மற்​றும் அதனை பரப்​புவோர் மீது உரிய விசா​ரணை நடத்​தப்​பட்டு கடும் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

மேலும் பொது​மக்​கள் இது போன்ற போலி​யான தகவல்​களையோ கடிதங்​களையோ கண்டு பயப்​பட​வோ, பதற்​றமடையவோ வேண்​டாம்.

இது தொடர்​பாக ஏதேனும் சந்​தேகங்​கள் இருந்​தாலோ மர்ம நபர்​கள் குறித்து தகவல் தெரிந்​தாலோ, நேரடி​யாக சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு​வின் தலை​வரை நேரில் சந்​தித்தோ 044-29551065 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ தெளிவு பெறலாம்.

இவ்​வாறு அதில்​  கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]