சென்னை: திமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநக​ராக தமிழகம் உரு​வாகி​யுள்​ளது’ என தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடும் உழைப்பால் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு புகழ்ந்துள்ளது.

இதுகுறித்து, அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்​டுத் தலைநக​ராக தமிழகம் உரு​வெடுத்​துள்​ளது.

இளைஞர்​களை ஆக்​கப்பூர்​வ​மான பணி​களில் ஈடு​படுத்​த​வும், சிதறிக் கிடக்​கும் இளைஞர்​களின் ஆற்​றல்​களைத் திரட்​ட​வும், அவர்​களை மனஉறுதி படைத்​தவர்​களாக உரு​வாக்​கும் பெரும் பொறுப்பை நிறைவேற்​றும் வகை​யில், இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை​யின் சிறப்​பான பணி​களுக்கு தமிழக அரசு ஊக்​கமளித்து வரு​கிறது.

திமுக அரசு சார்​பில், 44-வது செஸ் ஒலிம்​பி​யாட், சென்னை ஃபார்​முலா-4 கார் பந்​த​யம், சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் சாம்​பியன்​ஷிப், ஸ்கு​வாஷ் உலகக் கோப்​பை, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்​பியன்​ஷிப், கேலோ இந்​தியா இளைஞர் விளை​யாட்டு உள்​ளிட்ட போட்​டிகள் நடத்​தப்​பட்​டு, உலகள​வில் விளை​யாட்டு ஆர்​வலர்​கள் மத்​தி​யில் தமிழகம் முக்​கிய​மான விளை​யாட்டு களமாக மதிக்​கப்​படு​கிறது.

* சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி – 2022

* சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி – 2022

* ஸ்குவாஷ் உலக கோப்பை – 2023

* ஃபார்முலா- 4 கார் பந்தயம் 2024

* சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் 2025 முதலிய உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளால் புகழ் குவித்துள்ளது!

* அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள் !

* 3 % இட ஒதுக்கீட்டின்கீழ் 70 மாற்றுத்திறனாளிகள் உள்பட 301 விளையாட்டு வீரர்களுக்குப் பணி நியமனங்கள்!

* 6,689 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.215.78 கோடி ஊக்கத்தொகை !

* ரூ.86 கோடியில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் !

* விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள விருதுகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், சிதறிக் கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டிடவும், அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான பணிகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலனிலும், விளையாட்டுக் கலை வளர்ச்சியிலும் சிறப்புக் கவனம் செலுத்தி; பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றின் பயனாக இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல சாதனைகளை நிகழ்த்தி; இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் சென்னை எனப் புகழ் வளர்த்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள் மீது ஒரு கண்ணோட்டம்.

விளை​யாட்​டுப் போட்​டிகளில் ஆர்​வ​முடன் பங்​கேற்​கும் வீரர்​களுக்கு பயிற்​சிகள் பெற உதவித் தொகை, தங்​கும் இடவச​தி, போட்​டிகளில் பங்​கேற்க வெளி ஊர்​களுக்​கும் வெளி​நாடு​களுக்​கும் சென்​று​வரும் பயணச் செல​வு, வெற்றி பெற்ற வீரர் வீராங்​க​னை​களுக்​குப் பரிசுகள், ஊக்​கத்​தொகைகள் அனைத்​தும், போட்​டிகளுக்கு ஏற்ப வழங்​கப்​படு​கிறது.

சிறந்த வெற்​றிகளை ஈட்டி தமிழகத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் புகழ் தேடித்​தரும் வீரர், வீராங்​க​னை​களுக்கு அரசுத் துறை​கள், பொதுத்​துறை நிறு​வனங்​களில் உயர் ஊதி​யத்​துடன் பணி நியமனம் வழங்​கப்​படு​கிறது. மூன்று சதவீத இடஒதுக்​கீட்​டின்​கீழ் 5 ஆண்​டு​களில் 70 மாற்​றுத் திற​னாளி விளை​யாட்டு வீரர்​கள் உள்​ளிட்ட 301 விளை​யாட்டு வீரர்​கள் அரசு, பொதுத்​துறை நிறு​வனங்​களில் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

அதே போல், சர்​வ​தேச தேசிய அளவி​லான விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கங்​கள் வென்ற மாற்​றுத் திற​னாளி விளை​யாட்டு வீரர்​கள் உட்பட 6,689 வீரர் வீராங்​க​னை​களுக்கு ரூ.215.78 கோடி ஊக்​கத்​ தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை செம்​மஞ்​சேரி​யில் ரூ.261 கோடி​யில் உலகத் தரத்​திலான விளை​யாட்டு நகரம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. 234 தொகு​தி​களி​லும் தொகு​திக்கு ஒரு சிறு விளை​யாட்டு அரங்​கம் அமைக்​கப்​படும் என அறி​வித்​து, 141 அரங்​கங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் உள்ள 12,525 கிராம ஊராட்​சிகளுக்​கும், 12,831 நகர்ப்​புற உள்​ளாட்​சிகளுக்​கும் கலைஞர் விளை​யாட்டு உபகரணங்​கள் தொகுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறான நடவடிக்​கைள் மூலம், ‘இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநகரம் தமிழகம்’ என இன்று பெற்​றுள்ள புகழ், நாளை ‘உல​கின் விளை​யாட்​டுத்தலைநகரம் தமிழகம்’ என்​னும் பெரு​மை​யை​யும் புகழை​யும்​ ஈட்​டும்​.

இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்ளது.

[youtube-feed feed=1]