சென்னை: மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரைக்கு புளூ ஃபிளாக் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டு, முறையான, 100 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை மணலை சுத்தமாகவும், கடல் நீரை மாசுபடுத்துவதைக் குறைக்கவும் பல்வேறு மாநகராட்சி அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு வகையான இருக்கைகள், நிழற்குடைகள், கடற்கரைக்க மெருகூட்டம் அழகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மெரீனா கடற்கரையில் கல்விச் சிலை – கற்றனைத் தூறும் அறிவு சிலைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 10) திறந்து வைத்தார். ,ந்த சிலைகள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன,
சென்னை, காமராசர் சாலை, மெரீனா கடற்கரையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ. 1 கோடியே 43 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள “கல்விச் சிலை – கற்றனைத் தூறும் அறிவு” சிலைகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், சாதனைச் சரித்திரம் என்ற நூலினை முதல்வர் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 78 கோடியே 41 லட்சம் செலவில் ராமநாதபுரம் மாவட்டம், வல்லிமாடன்வலசையில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம்,
நாமக்கல் மாவட்டம், வையப்பமலையில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோவில் மலைச்சாலை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அலுவலகக் கட்டடங்கள், பொது சுகாதார கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மதுரையில் சுப்பிரமணியபுரம் திட்டப் பகுதியில் ரூ. 62.68 கோடி செலவில் கட்டப்பட்ட 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், கோயம்புத்தூர், அவிநாசி பிரதான சாலையில் உள்ள வ.உ.சி. பூங்காவில் ரூ. 50 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடுவின் திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பதிவுத்துறை சார்பில் ரூ.14 கோடியே 92 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள 7 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் (வடக்கு) பதிவு மாவட்டத்தில் சர்க்கார்சாமக்குளம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் தருமபுரி பதிவு மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம், ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
[youtube-feed feed=1]