சென்னை: திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க இடையூறு செய்யாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளதுடன், தவெகவின் வாக்குறுதியான ரூ.2,500 தருவது தற்போது சாத்தியமற்றது என்று கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. விஜய் தலைமையிலான தவெக 107 இடங்களை கைப்பற்றியும், ஆட்சி அமைக்க முடியாமல் தத்தளித்து வருகிறது தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கி உள்ளது. இதனால், மொத்தம் 112 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், அதை ஏற்க ஆளுநர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கடிதத்தில் 112 எம்எல்ஏக்களின் விவரம் மட்டுமே இருந்ததால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கோரியதாக தகவல் வெளியானது. இதனால் இன்று விஜயின் பதவியேற்பு று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போய் உள்ளது.
இதையடுத்து 2வது முறையாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விஜயின் சட்ட வல்லுநர்கள் குழு ஆளுநரை 2வது முறையாக சந்தித்து விளக்கம் கொடுத்தது. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் இதுவரை அழைக்க வில்லை.
இந்த நிலையில், நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதில் கூறியதாவது,
தவெக ஆட்சிக்கு திமுக இடையூறு செய்யாது என்றவர், முதல் ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி தவெக ஆட்சியை கண்காணிக்கும் என்றார்.
உடனடியாக இன்னொரு சட்டப்பேரவை தேர்தலை திமுக விரும்பவில்லை. அரசியலமைப்பு சிக்கலை ஏற்படுத்தவும் திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை.
விஜய் திமுக அரசு கொண்டுவந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டவர், பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளது குறித்துப் பேசிய ஸ்டாலின், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம என்றார்.
மேலும், தவெக கூறியதுபோல, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தரும் விஜய்யின் வாக்குறுதி குறித்தும் சந்தேகம் தெரிவித்த ஸ்டாலின், அதைச் செய்தால் மகிழ்ச்சி என்றார்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தடையின்றி தொடர வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை தொடர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால் மகிழ்ச்சிதான்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]