சென்னை: இன்று திருச்சியில் திமுகவின் பிரம்மாண்ட மாநாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை இறுதி செய்து வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உள்ளது. இந்ததேர்தலில் 4முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. ’’ஸ்டாலின் தொடரட்டும் ’’தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மிகப்பெரிய பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் 200 இலக்காகக் கொண்டு திமுக தேர்தல் பணிகளில் மும்மரம் காட்டி வருகிறது.
இந்த மாநாடு ஆனது திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான முக்கிய தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய மாசாடு சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தான் நடைபெறுகறமுது அதுமட்டுமின்றி சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில், நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 லட்சம் பேர் நின்று பார்க்கும் வகையில், மாநாட்டில் இடங்களை ஒதுக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுத் திடலுக்கு உள்ளே வருபவர்களுக்கு ஒன்பது நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு நுழைவு வாயில் தமிழக முதல்வர் துணை முதல்வர் வருவதற்காக நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் பகுதியில் இருந்து மாநாட்டு பாதை ஒரு கிலோமீட்டருக்கு மேலாக தார் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் என அனைவரும் வாகனம் நிறுத்தும் ஏதுவாக மாநாட்டின் இருபுறமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இந்த மாநாட்டிற்கு 24 ஆயிரம் வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களில் வரும் திமுக தொண்டர்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் முறையாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநாட்டின் மேடையில் பேசுபவர்களை பார்ப்பதற்கு, 200-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் திமுகவின் சார்பில் தேர்தலுக்காக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் கே என் நேரு ஏற்கனவே அறிவித்திருந்தார்.
2021 சட்டமன்ற தேர்தலின் பொழுது இதே இடத்தில் தான் திமுக மாநாடு நடத்தியது அப்போது மகளிர் உரிமை தொகை திட்டம் புதுமைப் பெண்கள் இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டது அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. அந்த வகையிலும் இந்த முறை என்ன மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உள்ளது.
[youtube-feed feed=1]