சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்  நடத்துகின்றனர். பணிக்கு வராத ஊழியர்களுக்க  சம்பளம் கட் செய்யப்படும் என  அரசு மிரட்டல் விடுத்தள்ளது.

பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், காலி பாட்​டில் திரும்​பப் பெறும் திட்​டத்​துக்கு டாஸ்மாக் பணி​யாளர்​களை பயன்​படுத்​தாமல் மாற்று வழி​யில் நடை​முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்மாக் தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்கை குழு கடந்த பிப்ரவரி 1ந்தேததி முதல் 19-ம் தேதி வரை தொடர் காத்​திருப்​புப் போராட்​டம் நடத்தியது.

இதையடுத்து, துறை அமைச்சரான முத்​து​சாமி, போராட்​டக் குழு​வை அழைத்து பேச்​சு​வார்த்தை நடத்தி கோரிக்​கைகளை நிறைவேற்​று​வ​தாக உறுதி அளித்​தார். இதையடுத்து டாஸ்மாக் பணி​யாளர்​களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு உட்பட 5 அறி​விப்பு​கள் சமீபத்தில் வெளி​யிடப்​பட்​டன. ஆனால், இந்த அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. தங்களது முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டியிது.

‘இதைத்தொடர்ந்து  இன்​று முதல் (மார்ச் 7)  டாஸ்மாக் மேலாண் இயக்​குநர் அலு​வல​கம் அருகே கால​வரையற்ற காத்​திருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட​ உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  டாஸ்மாக் பணி​யாளர்​கள் சங்க தலைவர், அமைச்​சர் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யின்​போது ஒப்​புக்​கொண்ட விஷ​யங்​களில், ஊதிய உயர்வு ரூ.1,000 என்ற ஒரு அறி​விப்பு மட்​டும் இடம்​ பெற்​றிருந்​தது. பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக மேலாண்மை இயக்​குநர் தலை​மை​யில் குழு அமைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டது. ஆனால், அறிக்​கை​யில் குழு என்ற வார்த்​தையே இடம்​பெற​வில்​லை. இடைக்​கால ஊதிய உயர்​வாக ரூ.5,000 கேட்​டிருந்​த​போ​தி​லும், ரூ.1000 தான் கொடுத்​திருக்​கிறார்கள்.

எங்​களு​டைய கோரிக்​கையை மறு​பரிசீலனை செய்​து, ஒப்​புக்​கொண்​டபடி மாற்று அறிக்​கையை வெளி​யிட வலி​யுறுத்தி இன்​று​முதல் தொடர் காத்​திருப்​புப் போராட்​டத்​தில் ஈடுபட உள்​ளோம்.

இவ்​வாறு கூறினர்

[youtube-feed feed=1]