சென்னை: உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, மாநில தகவல் ஆணையர்களாக அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் (ஓய்வு) & அபய்குமார் சிங் ஐ.பி.எஸ்(ஓய்வு) ஆகியோர் மார்ச் 06 பதவியேற்றுக் கொண்டனர். அவருக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெற்றது

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் மார்ச் 06 3டைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த பதவி ஏற்பு விழாவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம் எம்.பி., உயர் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆளுநராக பணியாற்றி வந்த ஆர்.என்.ரவியை மேற்குவங்க மாநிலத்துக்கு ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நேற்று (மார்ச் 05) உத்தர விட்டிருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (மார்ச் 07) மேற்கு வங்கத்துக்கு சென்று ஆளுநராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பங்கேற்ற கடைசி அரசு நிகழ்ச்சியாக இவை அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சிகளின் விருந்து வைக்கவுள்ளதாகவும் தகவல் கூறுகின்றனர். இதனிடையே, கேரளம் மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இமாச்சலப்பிரதேசம், தெலுங்கானா, நாகாலாந்து, லடாக், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநர்களை மாற்றம் செய்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]