சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது.
வேட்மனு மீதான நேர்க்காணல் மார்ச் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 6ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இந்த தேர்தல் போட்டியில், 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது தெரிய வநததுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று கல்லா கட்டி வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன. அதறகான அவகாசம் நேற்றுடன் (மார்ச் 6ந்தேதி) முடிவடைந்த நிலையில், மொத்தமாக 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் வரலாறு காணாத வகையில் கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் 15,372 விருப்ப மனுக்களை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
“வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கழகத்தின் திராவிட மாடல் 2.O ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கழகத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டியது, தேர்தல் பணிகளை மெருகூட்டியுள்ளது” என தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]