சென்னை: மார்ச் 6 – அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.

தமிழ்ழ்நாட்டில் முதன்முறையாக காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை வீழ்த்தி இந்திய வரலாற்றில் ஒரு மாநில கட்சி,  59 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் அரியணையில் ஏறியது. முதல்வராக மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பதவி ஏற்ற தினம் இன்று (மார்ச் 6)

இதையொட்டி,ல முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கமான எக்ஸ் தளத்தில்,  அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்’ என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

அவரது  பதிவில், 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்! திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்… உங்கள் அனைவரின் ஆதரவோடும்!

இவ்வாறு கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]