சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக  பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன்  வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பாமக தரப்பில், வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்,  பாமக நிறுவனர் ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதனின் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவரது மனு  நிராகரிக்கப்படும் என  வாய்ப்பு உள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என்.கனிமொழி சோமு, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடையும், து காலியாகும் இடங்களில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கிய நிலையில்,  இன்றுடன் மார்ச் 5ஆம் தேதி  முடிவடைந்தது.

இந்த தேர்தலில்  திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், , திமுக சார்பில் 2 பேர் கூட்டணி கட்சிகளான தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, அதிமுக கூட்டணியில், அதிமுக ஒரு இடத்திலும், அன்புமணி பாமக ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது. அதனப்டி,

திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதீக  எல்.கே சுதீஷ், காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகிய 4 பேரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதேபோல, அதிமுக சார்பில் தம்பிதுரையும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன், மாநிலங்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியவில்லை என்பதால் சுயேட்சை வேட்பாளராக தாக்கல் செய்துள்ள இவரது மனு நாளை நிராகரிக்கப்படும்.

தமிழக சட்டமன்றத்தில் பாமகவுக்கு தற்போது 5 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 5 பேரும் தற்போதைய சூழலில் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளனர். ராமதாஸ்  தரப்புக்கு ஆதரவாக மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகிய இருவர்  ஆதரவாக உள்ளனர். அன்புமணி தரப்புக்கு சிவகுமார், சதாசிவம் மற்றும் வெங்கடேசன் ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள்  ஆதரவாக உள்ளனர்.

[youtube-feed feed=1]