சென்னை:   சென்னையின் மைய பகுதியான   தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை  இடையே அமைக்கப்பட்டு வரும் 4 வழித்தட சாலைப் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை  தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை  நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்  கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு  ஆய்வு செய்தார்.

இந்த உயர்மட்ட சாலையானது  நெடுஞ்​சாலைத் துறை சார்​பில்,  ரூ.621 கோடி​யில் 3.20 கி.மீ.க்கு கட்​டப்​படும் நான்கு வழித்தட உயர்​மட்ட சாலைaக அமைக்கப்படுகிறது. அதன்படி, அண்ணா சாலை​யில் தேனாம்​ பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை  பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த  கட்​டு​மானப் பணியை முதல்​வர் ஸ்டா​லின் ஆய்வு செய்​தார்.

தற்போது அந்த பகுதியில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக, சென்னை, அண்ணா சாலை​யில் தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை போக்​கு​வரத்து நெரிசலில் 3.20 கி.மீ. தூரத்​தைக் கடக்க 30 முதல் 45 நிமிடங்​கள் ஆகின்​றன. இந்தபாலம் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால் 10 நிமிடங்களில் சாலையை கடந்துவிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்​டு​மானப்​பணி​களை ஆய்வு செய்த முதல்வர் பணி​களை விரைந்து முடிக்​கு​மாறு அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். அப்போது, அமைச்​சர்​கள் எ.வ.வேலு, மா.சுப்​பிரமணி​யன், தா.மோ.அன்​பரசன், நெடுஞ்​சாலை ​துறை செயலர் செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

 

[youtube-feed feed=1]