சென்னை:  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மாநிலங்களை வேட்பாளராக  திருச்சியை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்டோபர் திலக் என்பவர் அறிவிக்கப்பட்டு  உள்ளார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது. இதனிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் என்பவர் அறிவிக்கப்பட்டு ள்ளது.  . திருச்சியை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்டோபர் மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சத்திஷ்கர்  மாநில வேட்பாளராக ஸ்ரீமதி பூலாதேவி நேட்டம், அரியான மாநில வேட்பாளராக  கரம்வீர் சிங் போத், இமாச்சல் பிரதேச வேட்பாளராக அனுராக் சர்மா, தெலுங்கானா வேட்பாளராக அபிசேக் மனு சிங்வி, வேம் நரேந்தர் ரெட்டி, தமிழ்நாடு வேட்பாளராக எம்.கிறிஸ்டோபர் திலக் ஆகியோர்  அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

[youtube-feed feed=1]