மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. வழக்கை அரசு இழுத்தடித்து வருவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. மதுரை மாநகர காவல் ஆணையர், காவல் துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் ஆஜராகினர்.
அறங்காவலர் குழு தரப்பில், நீதிமன்றம் தெரிவிக்கும் 5 பேர் கொண்ட குழுவை பூஜை செய்ய அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அறங்காவலர் குழு தரப்பில் 2 வார அவகாசம் கோரப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில், நீதிமன்றம் தெரிவிக்கும் 5 பேர் குழுவுக்கு பதில் கோயில் குருக்களை பூஜை செய்ய அனுமதிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை சார்பில், நீதிமன்றம் தெரிவிக்கும் புதிய நடைமுறையை செயல்படுத்த போதிய அவகாசம் தேவை எனக் கூறப் பட்டது.
பின்னர் நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்ததாதற்கு அறங்காவலர் குழுவினரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கலாமா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், இந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல என்றும், இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவின்போது தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட வில்லை என்றால் மட்டுமே இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க முடியும். 2 நீதிபதிகள் அமர்வு ஒவ்வொரு கார்த்திகை திருவிழாவின் போதும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது என்றதுடன், தனி நீதிபதி இந்த ஆண்டு தீபத்தூணில் ஏற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். தனி நீதிபதியின் உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வு மாற்றி உள்ள நிலையில், இந்த நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு உகந்ததல்ல என்றனர்.
தொடர்ந்து நீதிபதி, நீதிமன்ற உத்தரவை மதிக்கும் அடையாளமாக தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்பதன் முன்னெடுப்பாகவே நீதிமன்றம் கூறும் 5 பேரை பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க கூறினேன் என்றார்.
அதற்கு அரசுத் தரப்பில், நீதிமன்றம் கூறுவதை ஆகம விதியின்படி செய்யலாமா என்பதை முடிவு செய்ய அறங்காவலர் குழுவின் ஆலோசனை மற்றும் துறையின் ஒப்புதல் தேவை. எனவே அவகாசம் வழங்க வேண்டும்.
அறங்காவலர் குழுவினரை அவமதிப்பு வழக்கில் சேர்க்க வேண்டாம் என வாதிடப்பட்டது. நீதிபதி, தீபம் ஏற்றுவது குறித்து முடிவெடுப்பது குறித்து ஆலோசிக்கட்டும். பூஜை செய்ய அனுமதிக்கலாமே என்றார்.
அதற்கு அரசுத் தரப்பில், இது மதநம்பிக்கை என்பதால், முந்தைய உத்தரவைப் போல கோயில் குருக்கள் சென்று பூஜை செய்யக்கூறலாமே என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆடேசபம் தெரிவித்த பிரதான மனுதாரர் தரப்பு, அரசு காரணம் கூறி தப்பிக்கிறது. அரசின் பெயரை காப்பாற்ற வாதங்களை முன்வைக்கின் றனர். எனவே கால அவசாகம் வழங்கக் கூடாது என்றனர்.
அதற்கு நீதிபதி, எப்படிப் பார்த்தாலும் அரசு நம்முடைய அரசு. தீபம் ஏற்றுவது தொடர்பாக பழைய அறங்காவலர் குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தெரிவிக்கப் பட்டது.
அதுகுறித்து முடிவெடுத்து, நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத் துறையின் ஒப்புதலைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக முடிவெடுத்து தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18-க்கு தள்ளிவைத்தார்.‘
[youtube-feed feed=1]