தஞ்சாவூர்: சி.எம். சார் நீங்கள் இந்த விஜயை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை, விஜியை உங்களால் முடக்க முடியாது  என்று ஆவேசமாக கூறினார். மேலும் திமுக ஆட்சி,. முன்மாதிரி ஆட்சி கிடையாது, மோசடி ஆட்சி, . மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி இது என்றும் கடுமையாக சாடினார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

”கரூரில் தொடங்கி ஜனநாயகன் வரை என்மீது பழிமேல் பழி போட்டார்கள். பலர் ஆதரவாக குரல் கொடுத்தார்கள். முக்கியமாக நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் பூசி மெழுகி  பட்டும் படாமல் குரல் கொடுத்தார். எப்படி இருந்தாலும் குரல் கொடுத்த அவர்களுக்கும், மற்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வரின் மனநிலை தற்போது எப்படி இருக்கும் தெரியுமா? ஏற்கெனவே கட்சிகாரங்க தூங்க விடுவதில்லை. தற்போது விஜய்யும் மக்கள் சக்தியுடன் வந்து தூங்க விடுவதில்லை. மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறார்.  நம்ம பாட்டுக்கு ஹைவேயில் சைக்கிள்ல சோலோவாக போகலாம்னு நினைச்சோம். இவன் என்னடா என்றால் மக்கள் சக்தியுடன் வந்து கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறான். இவன் மட்டும் கேட்காமல், மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறான்.

1000 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தோம், ரூ. 5000 கொடுத்து ஏமாற்றலாம் என்றால் அதையும் கேள்வி கேட்க வைக்கிறான். விசில் சத்தம் வேறு விண்ணை முட்டுகிறது. கூட்டணி கட்சிகளின் தொல்லையை தாங்க முடியவில்லை.

இவனது பிரச்சாரத்தையாவது முடக்கலாம் என்று பார்த்தால், அப்போதும் மக்கள் அவன் பக்கம் தான் நிற்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாத மனநிலையில் இருப்பார். கூட்டணி கட்சிகள் தொல்லை வேற தாங்க முடியவில்லை. பிரசாரத்தை முடக்கலாம்னு பார்த்தா அப்பவும் மக்கள் பின்னால் நிற்கிறார்கள்.  இந்த விஜய்யை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற விஜய்யை முடக்க முடியாது. அவர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிட்டாங்க சார். குடும்பம், குடும்பமாக பிரச்சாரத்திற்கு இறங்குவார்கள் பாருங்கள். அப்போது உங்களால் மட்டுமில்லை, யாராலும் தடுக்க முடியாது,” என்றார்.

உங்க அப்பாவுக்கு வெண்கல சிலை வைக்க நினைத்தபோது, மக்கள் பணத்தில் யாருக்கு புகழ் பாடப் பார்க்கிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்டது. அதற்கு அர்த்தம் ஊரான் வீட்டு நெய்யில் இனிப்பு செய்யாதீங்க என்பதுதான். மக்கள் பிரச்னைக்கு நிதியில்லை, இதற்கு மட்டும் எங்கிருந்து வந்தது. மக்கள் பிரச்னையை முதலில் பாருங்கள். சிலையை எல்லாம் பிறகு பார்க்கலாம். சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், நீட்டை ஒழிப்போம் என்பதெல்லாம் என்ன ஆனது. முன்மாதிரி ஆட்சி கிடையாது, மோசடி ஆட்சி இது. மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி இது” எனத் தெரிவித்தார்.

இது இந்த தேர்தலில் 100 சதவீதம் நிஜமாகும். நீங்கள் எல்லோரும் எனக்கு இன்னும் ஒரு உறுதி மொழியை கொடுக்க வேண்டும். ஊழல் அற்ற சமூக நீதியை நிலைநாட்ட விஜய்க்கு வாக்கு கொடுப்பீர்கள் தானே? நம்முடைய ஆட்சி அமையும் தானே? ஒவ்வொரு வீட்டில் இருந்தும் விசில் சத்தம் கேட்கும் தானே?
நமக்கு உடல்நல பிரச்சனை என்றால் டாக்டரை தேடி சொல்வோம், வேறு ஏதாவது சட்ட பிரச்சனைகள் என்றால் வக்கீலை தேடிச் செல்வோம், அதைப் போல நம்மை அறியாமல் விவசாயிகளுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். அவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. இந்த உலகத்தை படைத்தது கடவுளாக இருக்கலாம், ஆனால் அந்த கடவுளை விடவும் உயர்ந்தவர்கள் விவசாயிகள்.
இந்த பூமியை அழகாக மாற்றுவதில் இறைவனை விட விவசாயிகள் முக்கியமானவர்கள். அடுத்த ஜென்மம் பற்றிய நம்பிக்கையை எனக்கு கிடையாது. ஆனால், அடுத்த பிறவியில் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவு கொடுப்பது உங்கள் திமுக அரசு தானே? அதை இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? அவங்களோட டீலிங்கில் இருப்பது நீங்கள் தானே.. இயற்கை வளங்கள் திவாலாக போகிறது, மொத்தத்தில் உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாக போகிறது. கடன் மேல் கடன் வாங்கி உங்கள் அரசே குப்புற படுத்துக் கொண்டது..
விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகப் போனது.. டெல்டாக்காரன் எனக் கூறிக்கொள்ளும் நீங்கள் இதை கவனிப்பீர்களா? விவசாயிகளின் போராட்டத்திற்கு என்றைக்காவது களத்தில் நின்றுள்ளீர்களா? குண்டாஸில் போடுவது தான் உங்களின் இயல்பு..
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைபோம், இந்தியாவில் முதல் முறையாக நாங்கள் தான் இப்படி ஒரு திட்டத்தை முன்மொழிந்தோம் என கூறிக் கொள்ளும் திமுக அரசின், ஒரு திட்டம் என்ன தெரியுமா? இது போன்ற முக்கியமான திட்டங்களை ஆட்சி முடியும் தருவாயில் அறிவித்து அடிக்கல் நாட்டுவார்கள், அதன் பிறகு தேர்தலில் தோற்று விடுவார்கள். அடுத்த ஆட்சியில் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது, இது எங்கள் திட்டம் என சொல்வார்கள்.
மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஆட்சிக்கு வந்த உடனேயே நீங்கள் செய்து முடிக்க வேண்டியது தானே? ஆட்சி முடியும் தருவாயில் ஓட்டுக்காக இதை எல்லாம் செய்கிறீர்கள். நம்முடைய ஆட்சியில் இது போன்ற பெரிய திட்டங்களை உடனடியாக 5 வருடங்களுக்குள் செய்து முடிக்க முயற்சிப்போம்.
முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சனைகள் பற்றி உனக்கு என்ன தெரியும் என கேள்வி கேட்கிறார்கள்.. ஐயா மேதாவிகளே தண்ணீருக்குள்ளேயே சென்று அணைகளில் உறுதி தன்மையை ஆராய்ந்து பார்க்கும் தொழில்நுட்பம் வரையில் நான் எல்லாம் தெரிந்து தான் வைத்திருக்கிறேன்.
ஒருவன் அமைதியாக இருக்கிறான் என்பதற்காக அவனுக்கு எதுவும் தெரியாயாது என நினைத்து விடாதீர்கள்.
அடுத்ததாக கடல் விவசாயம் .. நமது மீனவர்கள் பிரச்சனையில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விட்டு மீண்டும் தூங்கி விடுவார்கள்.. இப்படி கடிதம் எழுதுவதில் எந்த பயனும் இல்லை. மத்திய அரசுக்கு உண்மையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். நம்முடைய மீனவர்கள் மீது யாரும் கை வைக்கக்கூடாது. அவர்களுடைய பாதுகாப்பு பக்காவாக இருக்க வேண்டும், நம்முடைய ஆட்சியில் அது கண்டிப்பாக நடக்கும்.
திமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது சரித்திரத்திலேயே கிடையாது. சீனப் பெருஞ்சுவரை விட மிகப்பெரிய சவால் அது. ஆணாகப்பட்ட ஸ்டாலினின் அப்பாவாலேயே அது முடியவில்லை.. கலெக்ஷன் பார்ப்பது மட்டும் அரசியல் அல்ல, உண்மையாக மக்களுக்கு உதவுவதே அரசியல்.
ஒன்று நீ, மற்றொன்று நான்.. நம் இருவரில் யாராவது தான் ஆட்சிக்கு வரவேண்டும்.. வேறு யாரும் வந்து விடக்கூடாது. நமக்குள் நடுவே யாரும் வந்து விடக்கூடாது, நம் இருவரால் மட்டும் தான் மக்களை ஈசியாக ஏமாற்ற முடியும். இந்த விஜயால் எல்லாம் நம்முடைய ஆசை கேள்விக்குறியாகிவிட்டது. நாம் இருவரும் தீவிரமாக அடித்துக் கொள்வதைப் போல அடித்துக் கொள்ள வேண்டும். மாத்தி மாத்தி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைத்தோம் ஆனால் விஜய் அந்த ஆசையில் மண்ணை வாரி போடுகிறான். ஒரு பக்கம் நீ தடுத்து விடு, மறுபக்கம் நான் விஜயை தடுத்து விடுகிறேன்.. என்ன டீலிங் ஓகேவா ஓவர் ஓவர்… இதுக்கு உண்மையிலேயே நான் சிரிப்பதா அழுவதா எனக்கு தெரியவில்லை.. உண்மையில் இது போல தான் அவர்களின் டீலிங் உள்ளது.
உங்கள் தந்தைக்கு வெண்கல சிலை வைக்க வேண்டும் என நினைத்தீர்களே, அதற்கு உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?
மக்களுக்கு சோறு வைக்க பாருங்கள் சார்.. சிலை வைப்பதை பிறகு பார்க்கலாம்.. கேஸ் மானியம் என்ன ஆனது.. இதைவிட பெரிதாக ஒன்று இருக்கிறது மாநில அரசால் எதுவுமே செய்ய முடியாது என நன்றாக தெரிந்தும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தீர்களே . எவ்வளவு பெரிய மோசடி இது? கேட்டால் நாங்கள் தான் முன்மாதிரி ஆட்சி என கூறுவார்கள்.. மோசமான ஆட்சிகளிலேயே முக்கியமான ஆட்சி திமுக ஆட்சி..
விஜய்யை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா? இந்த சப்தத்திற்கு அர்த்தம் தெரியுமா சார்.. திமுக ஆட்சி முடியட்டும் தவெக ஆட்சி மலரட்டும் என அர்த்தம்..
திருநெல்வேலி நாங்குநேரி சம்பவம் தொடர்பாக ஒரு பதிவை பார்த்தேன் அதையே நானும் கூறுகிறேன், திமுக ஆட்சி தொடரட்டும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும் என்று..
நம்முடைய ஆட்சியில் உரம் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம். 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும் , 5 ஏக்கருக்கும் கூடுதலாக வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை 50 சதவீதம் வரை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கையையும் எடுப்போம்..
திமுக போல சொல்லிவிட்டு பின்னர் ‘தகுதி’ என இடைச் சொருகலாக எதையும் சொல்ல மாட்டேன் அனைவருக்கும் செய்வோம்..
விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக எந்த திட்டமாக இருந்தால் அதை நம்முடைய ஆட்சி நிறைவேற்றாது.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வீணாவதை பார்த்துக் கொண்டு நம்முடைய அரசு சும்மா இருக்காது. போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படும்.. நெல் கொள்முதலுக்கு ஒரு பைசா கூட கமிஷன் வாங்கப்படாது. அப்படி மீறி வாங்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..
500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என நிர்ணயம் செய்யப்படும். ரேஷன் கடைகளில் அரிசி தவிர்த்து அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விற்கப்படும்.
கல்வி மருத்துவம் குடிநீர் சாலை வசதி வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களுக்கு மட்டும் தான் இந்த அரசு முக்கியத்துவம் தரும்..
நாங்கள் ஊழலே செய்யாதவர்கள் என்றோ, ஊழலை செய்ய மாட்டோம் என்றோ உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா? ஆனால் தைரியமாக அப்படி ஒரு ஆட்சியை தருவோம்..
என் நெஞ்சில் குடியிருக்கும் தஞ்சை மக்களே.. உங்களுடன் நான் இருக்கிறேன், நம்மோடு நம் மக்கள் இருக்கிறார்கள்.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்.. மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்..
இவ்வாறு அவர் பேசினார்..
[youtube-feed feed=1]