சென்னை: அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்!   என அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அய்யா வைகுண்டர் அவதார தினம் (பிறந்தநாள்) ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான மாசி மாதம் 20-ம் தேதி  (தோராயமாக மார்ச் 4ந்தேதி) வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 1833-ஆம் ஆண்டு மாசி 20-ல் திருச்செந்தூர் கடலில் இருந்து நாராயணனின்  மகனாக அவர் அவதரித்ததாக நம்பப்படுகிறது. இந்த நாள் பெரும்பாலும் மார்ச் மாதம் 4-ம் தேதி (2025-ல் 193-வது அவதார தினம்) வருகிறது. இந்த ஆண்டு அவரது 194வது அவதான தினமாகும். இதையொட்டி, அவரது கோவில்களில் இன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,   இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!

“கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்” எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.

‘தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்’ எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்!

[youtube-feed feed=1]