டெல்லி: ‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட் கொடுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதை ஏற்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர் கிரிஷ் சோடங்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
மாரச் 1ந்தேதி காங்கிரஸ் கட்சி உடன் தி.மு.க தொகுதி பங்கீடு பேச்சுவாத்தையை தொடங்கியது. தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை 11 மணி அளவில், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு, தி.மு.க எம்.பி. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் சுமார் 1 மணி நேரம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் 29 தொகுதிகளை கேட்டதாகவும், அதை ஏற்க திமுக மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
“பேச்சுவார்த்தையின் போது கிரிஷ் சோடங்கர், ‘காங்கிரஸுக்கு தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி இருக்கிறது. புதிதாக கூட்டணிக்கு கட்சிகள் வந்துள்ளதால் பழைய கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக உங்கள் தலைவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து எங்கள் மேலிடம் ஆலோசித்து, 29 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் கேட்கும்படி தெரிவித்துள்ளது’ என இறங்கி வந்தார்.
அதற்குப் பதிலளித்த டி.ஆர்.பாலு, ‘நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. 23 தொகுதிகள், ஒரு மக்களவை இடம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைத் தருகிறோம். அதேபோல், மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5-ம் தேதியாகும். எனவே, தாமதிக்காமல் மார்ச் 3-ம் தேதிக்குள் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் யார் என்பதைச் சொல்லிவிடுங்கள். கூடுமானவரை தமிழகத்தில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார். அதற்கு காங்கிரஸ் குழுவினர், ‘எங்கள் கட்சி மேலிடத்துடன் ஆலோசித்து விட்டுச் சொல்கிறோம்’ எனக் கூறிவிட்டுச் சென்றனர்’’ என்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக -காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாகச் செல்கிறது. எங்களுக்கு தேவையானதைக் கேட்டுள்ளோம், அவர்களும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர். ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். எங்கள் கூட்டணி கொள்கை ரீதியானது. இதைச் சிதைக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.
தவெக-வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. கிரிஷ் சோடங்கர் சொல்லாத கருத்தைச் சொன்னதாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் மேலிடம் திமுக-வுடன் கூட்டணி தொடரவே அறிவுறுத்தியுள்ளது. இன்னும் 2 நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “நாங்கள் சமர்ப்பித்த விருப்பப் பட்டியலை தி.மு.க ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம். தற்போது, எங்கள் முன்னுரிமை சட்டமன்றத் தேர்தல் தான். இதன் மூலம் கிடைக்கும் போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில், ராஜ்யசபாவில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்க முடியும். தி.மு.க எங்களுக்கு 25 இடங்களை வழங்கியுள்ளது. ஆனால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. புதிய கட்சியான த.வெ.க-வை குறைத்து மதிப்பிட முடியாது. காங்கிரஸின் பலத்தையும், ராகுலையும் த.வெ.க அங்கீகரித்து வருகிறது” என்றார்.
கிரிஷ் சோடங்கரின் இந்த பேச்சு அரசியல் களத்தில் மீண்டும் பேசுப்பொருளாகியுள்ளது.
[youtube-feed feed=1]