சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமினை சென்னை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2025ம் ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத் தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டியது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி நாகேந்திரன் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தமக்கு ஜாமின் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையில், இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சார்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் மனுதாரருக்கும் ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
காவல்துறை சார்பில், குற்றச்சாட்டு பதிவு கட்டத்தில் இருக்கும் நிலையில் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமினில் உள்ள 12 பேரின் ஜாமினை ரத்து செய்த அவர்கள் அனைவரும் சரணடைய உத்தரவிட்டுள்ளது.
மறைந்த ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமினுக்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் மனைவி மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]