சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5ந்தேதி வரை அவகாசம்  வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு- கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் இன்றுடன்முடிவடையும் நிலையில், மேலும் 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு- கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. முதன்மைத் தேர்விற்குத் தகுதி பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ரூ. 200 தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும்,

இந்த நிலையில், தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட விண்ணப்பதாரர்களின் கோரிக்கை இதுவரை கட்டணம் செலுத்தாத சில தேர்வர்களுக்கு வரும் மார்ச் 5ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தி உள்ளது. பெரும்பானவர்களின் கோரிக்கையை ஏற்று,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களில், 766 விண்ணப்பதாரர்கள் இன்னும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவில்லை. 113 விண்ணப்பதாரர்கள் தங்களின் மாற்றுத்திறனாளி சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,  எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கூடுதல் அவகாசம் என்பதால், கடைசி நேரத் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க முன்கூட்டியே பணிகளை முடிப்பது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, குரூப் 2ஏ பணிக்காக மொத்தம் 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்தத் தேர்வில், தகுதி பெற்றவர்கள் உரிய நேரத்தில் கட்டணத்தைச் செலுத்தித் தங்களின் வாய்ப்பை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம்.

[youtube-feed feed=1]