சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க, அமலாக்கத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமலாக்க இயக்குநரகம் (ED) தலைவர் ராகுல் நவீன் மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) ஆகியவற்றின் கீழ் அமலாக்க இயக்குநரகம் கையாளும் பல்வேறு வழக்குகளின் நிலையை ஆய்வு செய்வதற்காக அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமலாக்க இயக்குநரின் வருடாந்திர வருகை இது என்றும், அவர் மற்ற மையங்களுக்கும் வருகை தருவதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தாலும், மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னதாக இது நடைபெறுவதால், நகரில் அவரது மூன்று நாள் முகாம் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், தலைமை அதிகாரியின் வருகையின் நிகழ்ச்சி நிரல் குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் வாய் திறக்கவில்லை, மேலும் அது ரகசியமானது என்றும் கூறின.
இந்த நிலையில் 3 நாள் பயணமாக வந்த அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் ராகுல் நவீன் தலைமையில், சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 27ந்தேதி நடைபெற்றது. இதில் அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்குகளின் விசாரணை நிலைமை மற்றும் வழக்குகளை துரிதப்படுத்துவது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை ய்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தலை யொட்டி, சட்டவிரோத பண பரிமாற்றத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைவெபற உள்ள நிலையில், தோ்தலின்போது சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அரசியல் கட்சியினா் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்புள்ள தொகுதிகள் என்ற சந்தேகத்துக்குரிய இடங்களை எவ்வாறு கண்காணிப்பில் வைத்திருப்பது என ஆலோசிக்கப்பட்டது.
மத்திய, மாநில காவல் அமைப்புடன் இணைந்து செயல்படுவது, உளவுத் தகவல்களை பகிா்ந்து கொள்வது, சந்தேகத்துக்குரிய இடங்களில் சோதனை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற தோ்தலையொட்டி, மத்திய மற்றும் மாநில காவல், பாதுகாப்பு அமைப்புகள் உஷாா்படுத்தப்பட்டுள்ளன. தோ்தலின்போது வாக்காளா் களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுப்பதற்கு வருமானவரித் துறையும், அமலாக்கத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
[youtube-feed feed=1]