சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமை இன்று தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறது.
திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்முலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கோரிக்கை வைத்தனர். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதை திமுக தலைமை தவிர்த்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தலின்படி, ஆட்சியில் பங்கு என்பதை காங்கிரஸ் கைவிட்டது.
தொடா்ந்து, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், முதல்வா் ஸ்டாலினுடனை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இருப்பினும், கிரீஷ் சோடங்கா், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருப்பதாக கூறி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தினார் . இதனால் மீண்டும் திமுக-காங்கிரஸ் இடையே மீண்டும் பேச்சுவாா்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
இந்த நிலையில், திமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும்படி, காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவுக்கு அகில இந்திய தலைமை உத்தரவிட்டது. அதன்படி, திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
திமுக தொகுதி பங்கீடு குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தலைமையிலான குழுவினருடன், காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுத் தலைவா் கிரீஷ் சோடங்கா் தலைமையில் அகில இந்திய செயலா்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கின்றனா்.
இதில், காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி உள்பட அவர்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலக்கப்பட உள்ளது.
இன்று திமுக பேச்சுவார்த்தை குழு விசிகவுடனும் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளது.
ஏற்கனவே மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27ந்தேதி) பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதன்பிறகு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கூறுகையில், பேச்சுவாா்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றது. கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரியுள்ளது. முதல்வருடன் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளனா். தொகுதிகள் சம்பந்தமான எந்தப் பட்டியலும் கொடுக்க வில்லை. எண்ணிக்கை முடிவான பிறகு தொகுதிகள் தொடா்பான பட்டியலை கொடுப்போம் என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறுகையில், தொகுதிகள் எண்ணிக்கை தொடா்பான பேச்சு இன்னும் தொடா்கிறது. தொகுதிகள் குறைப்பது தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்றாா். இதேபோல், கொமதேக குழுவுடன் பிப்ரவரி 27ந்தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
[youtube-feed feed=1]