சென்னை: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பிப்ரவரி 27    ஒரே நாளில்  தமிழகத்​தில் ரூ.4,813.92 கோடி​யில் கட்​டப்​பட்ட 13 சாலைகள் மற்​றும் ஒரு பாலம் மற்​றும் ரூ1,970.57 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 38 துணை மின் நிலை​யங்​கள்  திறந்து வைத்​தார்.

புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார். உடன் அமைச்சர் சிவசங்கர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை தலைமை செயலர் மங்கத் ராம் சர்மா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்,  தலை​மைச் செயல​கத்​தில், நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் செங்​கல்​பட்​டு, காஞ்சிபுரம், திரு​வள்​ளூர், ராணிப்​பேட்​டை, தஞ்​சாவூர், மயி​லாடு​துறை, கடலூர், கள்​ளக்​குறிச்​சி, தென்​காசி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி திரு​வாரூர், நாகப்​பட்​டினம், சேலம், நாமக்​கல் மற்​றும் திருப்​பூர் ஆகிய மாவட்​டங்​களில் ரூ.4,712.55 கோடி​யில் 13 சாலைகள் மற்​றும் திருச்​சி- கரூர் மாவட்டங்​களில் ரூ.101.37 கோடி​யில் கட்​டப்​பட்ட பாலத்​தை​யும்​ மக்​கள் பயன்​பாட்​டுக்​காக காணொலி​யில் முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். மேலும், மயி​லாடு​துறை மாவட்​டத்​தில் ரூ.113 கோடி​யில் அமைக்​கப்பட உள்ள புறவழிச்​சாலைப் பணிக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

உள்​துறை சார்​பில், மதுரை​யில் ரூ.1.45 கோடி செல​வில் அறி​வுரைக் குழும அலு​வல​கக் கட்​டிடத்தை திறந்து வைத்த முதல்​வர், ரூ.137.04 கோடியில் குற்​றம் மற்​றும் குற்​ற​வாளி​கள் கண்​காணிப்பு வலைபின்​னல் அமைப்பு 2.O மற்​றும் டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு அமைப்பையும் தொடங்கி வைத்​தார்.

இதுத​விர, வாக​னங்​களில் வாகன இருப்​பிட கண்​காணிப்​புக் கருவி அமைக்​கும் திட்​டத்​துக்காக ரூ.7.24 கோடி​யில், ஒருங்​கிணைந்த கண்​காணிப்பு கட்​டுப்​பாட்டு மையம், 7 வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கங்​களில் கணினிமய​மாக்​கப்​பட்ட தானி​யங்கி ஓட்​டுநர் தேர்​வுத்​தளங்​கள் ஆகிய​வற்​றை​யும் தொடங்கி

அத்​துடன் 53 மோட்​டார் வாகன ஆய்வாளர் பணி​யிடங்​களுக்கான நியமன ஆணை​களை​யும் வழங்​கி​னார்.மேலும் தமிழ்​நாடு மின் தொடரமைப்​புக் கழகம் மற்​றும் தமிழ்​நாடு மின்​பகிர்​மானக் கழகத்​தின்சார்​பில் ரூ.1,970.57 கோடி​யில்பல்​வேறு மாவட்​டங்​களில் நிறு​வப்​பட்​டுள்ள 38 புதிய துணை மின் நிலை​யங்​களை திறந்து வைத்தார்.

மேலும், தூத்​துக்குடி அணியாபரநல்​லூரில் ரூ.46.65 கோடியில், புதிய பால்​பண்ணை, திட்​டக்​குடி​யில் ரூ.33 கோடி​யில் கால்​நடை தீவன உற்​பத்தி ஆலை மற்றும் நீல​கிரியில் பாலாடைக் கட்டி தயாரிக்​கும் தொழிற்​சாலை ஆகிய​வற்றை முதல்​வர் திறந்​தார்.

இதுத​விர, 7 பால் பண்​ணை​களில் ரூ.29.93 கோடி​யில் தானி​யங்கி பால் பாக்​கெட்​கள் அடுக்​கும் இயந்​திரங்​கள் நிறு​வும் பணி​கள், மதுரை- சாத்​தமங்கலம், திருச்​சி​- கொட்​டப்​பட்டுபால் பதப்​படுத்​தும் ஆலைகளை ரூ.67.62 கோடி​யில் தானி​யங்கி ஆலைகளாக மேம்​படுத்​தும் பணிகளுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

சேலம், விருதுநகர் அரசு அருங்​காட்​சியக கட்​டிடங்களை திறந்​தார். மேலும், ரூ.248.66 கோடி​யில் கட்​டப்​பட​வுள்ள திரு​வண்​ணா​மலை, மாமல்​லபுரத்​தில் தமிழர் பண்​பாட்டு அருங்​காட்​சியக புதிய கட்​டிடங்​கள், சென்னையில் சிந்​து​வெளிப் பண்​பாட்டு அரங்​கம் ஆகிய​வற்​றுக்கும் அடிக்​கல் நாட்​டி​னார். இவைத​விர, பட்​டு​வளர்ச்​சித் துறை​யின் சார்​பில் தேர்வான 11 விருதாளர்களுக்கு ரூ.8 லட்​சம் பரிசுத்​தொகை வழங்​கி​னார்​.

[youtube-feed feed=1]