சென்னை: திமுகவில்  இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஒபிஎஸ் மற்றும் ஐயப்பன் தங்களது  எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஸ், வேறு வழியின்றி இன்று திமு கதலைவர் ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் அடைக்கலம் அடைந்தார். அவருடன்,   ஓபிஎஸ் மகனும், முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் குமாரும், ஐயப்பன் எம்எல்ஏவும்  திமுகவில் இணைந்தனர்.

இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று  ஓபிஎஸ், அங்கு சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தேனி போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஐயப்பன்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். போடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதுபோல ஐயப்பனும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.  அவர்கள் இருவரும் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

[youtube-feed feed=1]