சென்னை: சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

2024 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொடர் போராட்டத்தின்போது, அரசு மற்றும் சாம்சங் நிறுவனம் கொடுத்த உறுதிமொழியை மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் 27 பேரை சாம்சங் நிறுவனம் பணி நீக்கம் செய்ததுடன், மற்ற தொழிலாளர்களிடம் பல்வேறு உறுதிமொழி கடிதங்களை பெற்று பணி கொடுத்து வந்தது. மேலும் அதிக அளவிலான கெடுபிடிகளை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 ஊழியர்கள் சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராகத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை சாம்சங் ஆலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளது‘. இது தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிலவி வந்த தொழிலாளர் அமைதி மீண்டும் குலைந்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, ஒரு பிரிவினர் போராட்ட களத்தில் குதித்துள்ளதால் அங்கு மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
முன்னதாக கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் ஆலைக்கு எதிராக தொடர்ந்து 27 நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு நடந்த உள்ளிருப்புப் போராட்டங்களால் சாம்சங் நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அங்கு செய்யப்படும் உற்பத்தியைப் பெருமளவு பாதித்திருந்தது.
இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரி 2025-இல் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் 27 ஊழியர்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. பின்னர் இதில் திமுக அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஆலை நிர்வாகம் என பலமுறை கூடி பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தகன. இதையடுத்து போராட்டக்கார்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதுபோல பணியிடை நீக்கம் செய்தவர்களும் பணியில் சேர அனுமதித்து.
ஆனால், அவர்களை இதுவரை பணிக்கு வர அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், இந்த ஊழியர்களுக்கு தற்போது வரை ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறினாலும், அவர்களை மீண்டும் பணிக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’, இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 24ந்தேதி அன்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.
அரசு மற்றும் நிர்வாகத்துடன் நடைபெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தங்களின் பலத்தைக் காட்டவும், கோரிக்கையின் தீவிரத்தை உணர்த்தவும் இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால், மீண்டும் ஒரு தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
[youtube-feed feed=1]