நல்லகண்ணு கடந்து வந்த பாதை!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பிறந்தார் நல்லகண்ணு.

18 வயதில் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து ஏழை எளிய, தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர்.

மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி சிறை சென்றவர்.

1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக இருந்தார்.

சிறுவயதிலேயே ஆர்வத்துடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

தனது வாழ்நாளின் பெரும் பகுதியைப் போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்தவர்.

விடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான பல போராட்டங்களில் ஈடுபட்டவர்.

80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவுடமைக் கொள்கையுடன் பயணித்தவர்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தியவர்.

மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களின் விவரத்தை தொகுத்து நூலாக வெளியிட்டவர்.

தனது 80வது பிறந்தநாளையொட்டி கட்சி வசூலித்து கொடுத்த ரூ.1 கோடியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர்.

2022ல் தகைசால் தமிழர் விருதுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்துடன் ரூ.5000-ஐ சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பிக் கொடுத்தவர்.

நல்லகண்ணுவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.

[youtube-feed feed=1]