டெல்லி: அமைச்​சர் கே.என்​.நேரு மீது உடனே  ஊழல் வழக்கு பதிவு செய்ய  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, நேரு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுக மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் ஊழல், குடிநீர் வாரியத்தில் டெண்டர் ஊழல் என சமார்  ரூ.1,000 கோடிக்குமேல் ஊழல் செய்துள்ளதாக, திமுக அமைச்​சர் கே.என். நேரு மீது வழக்​குப் பதிவு செய்ய உத்​தர​விட்ட விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தில் அதி​முக எம்​.பி. இன்​பதுரை, அமலாக்​கத் துறை தரப்​பில் கேவியட் மனுக்​கள் தாக்​கல்செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் முறை​கே​டாக டெண்​டர் வழங்​கப்பட்​டுள்​ள​தாக​வும் உதவி பொறி யாளர், இளநிலை பொறி​யாளர், நகரமைப்பு அலு​வலர் உள்​ளிட்ட 2,538 பணி​யிடங்​களுக்​குத் தலா ரூ.25 லட்​சம் முதல் ரூ. 35 லட்​சம் வரை லஞ்​சம் வசூலிக் கப்​பட்டு பணிநியமனம் நடந்​துள்​ள​தாக​வும் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடந்த ஆண்டு அக். 27-ல் கடிதம் அனுப்​பியது. அதில், துறை அமைச்​சர் கே.என்​.நேருவின் சகோ​தரர்​களான ரவிச்​சந்​திரன், மணிவண்​ணனுக்​குச் சொந்​த​மான இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யின்​போது கிடைத்த ஆவணங்​களின் அடிப்​படை​யில் மிகப்​பெரிய முறை​கேடு நடந்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ள​தாக அமலாக்​கத் துறை தெரி​வித்து 3 முறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்​பியது.

இந்தக் கடிதத்​தின் அடிப்​படை​யில் அமைச்​சர் நேரு, அவரது சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவன்​ணன் உள்​ளிட்​டோர் மீது ஊழல் வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்​கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஆதி​நா​ராயணன் மற்​றும் அதி​முக எம்​.பி. இன்​பதுரை ஆகியோர் உயர் நீதி​மன்​றத்​தில் தனித்​தனி​யாக வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், அமலாக்​கத் துறை தந்த ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் அமைச்​சர் கே.என்​.நேரு உள்​ளிட்​டோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சட்​ட நடவடிக்கை எடுக்க பிப்.20-ம் தேதி உத்​தர​விட்​டது.

இந்த உத்​தர​வுக்கு எதி​ராக அமைச்​சர் கே.என்​.நேரு உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனுக்​கள் தாக்​கல் செய்தனர். இதை விசா​ரிக்​கும்​போது தங்​களது தரப்பு கருத்​தை​யும் கேட்ட வேண்​டும் எனக் கோரி, அதிமுக எம்​.பி. இன்​பதுரை சார்​பில் வழக்​கறிஞர் பாலாஜி சீனி​வாசன், அமலாக்​கத் துறை வழக்​கறிஞர் அரவிந்த் குமார் சர்மா ஆகியோர் கேவியட்​ மனுக்​களைத்​ தாக்​கல்​ செய்​துள்​ளனர்​.

[youtube-feed feed=1]