டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி புகழாரம் சூட்டி உள்ளனர்.
இன்று மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பான பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவில்: ஜெயலலிதா-வை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன் என கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதா பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள்.
ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார். பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும்”.
இவ்வாறு கூறி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இதயதெய்வம் “அம்மா” அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம்,
“அம்மா” எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை,
பெண்களின் தைரியம்,
தாய்மையின் உருவம்.
அதிகாரம் அவரை உயர்த்தவில்லை;
மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், வறுமை ஒழிப்புக்கான உலகளாவிய தரநிலைகளை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.
சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.
We Take a leaf out of your book in all
of our actions for the people Amma
‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று அம்மா சொன்னதைப் போல, அதிமுக என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதய தெய்வம் அம்மா சூளுரைத்தார்கள்.
அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.
அஇஅதிமுக அரசின் சாதனைகளையெல்லாம், திமுக அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் திமுக-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,
கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி,
தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.
“நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”
வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்!
வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்!
வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”!
இவ்வாறு கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]